கருவை கலைக்க வைத்து அடித்து துன்புறுத்தினார்: முன்னாள் அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்
அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி தேவா புகார் அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டன் மீதே நடிகை புகார் அளித்துள்ளார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் சாந்தினி அளித்த புகாரில், தன்னுடன் 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் ஏமாற்றுகிறார், கருவை கலைக்க வைத்து அடித்து துன்புறுத்தினார்.
அத்துடன் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார்.
கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார் என்று நடிகை சாந்தினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.