திருமணத்தில் முடிந்த 15 ஆண்டுகால காதல்! பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்
தமிழ்ப்பட நடிகை அபிநயா தனது நீண்டகால காதலரை திருமணம் செய்துகொண்டார்.
நடிகை அபிநயா
தமிழில் நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அபிநயா 'ஆயிரத்தில் ஒருவன்', 'ஈசன்', 'ஏழாம் அறிவு', 'தனி ஒருவன்', 'மார்க் ஆன்டனி' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் வெகேசனா கார்த்திக் என்கிற சன்னி வர்மாவை 15 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் நடந்தது.
ஐதராபாத்தில் திருமணம்
இந்த நிலையில் நேற்றைய தினம் அபிநயா, சன்னி வர்மா ஜோடிக்கு ஐதராபாத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதில் திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து திருமண வரவேற்பு வருகிற 20ஆம் திகதி நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அபிநயா, சன்னி வர்மா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |