உடலில் ஆடையின்றி சாலையில் நடந்து சென்ற பிரபல நடிகை: விசாரணையில் வெளியான உண்மை
அமெரிக்காவில் பிரபல நடிகை ஒருவர் உடலில் ஆடையின்றி சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழ் பெற்ற நடிகை
அமெரிக்காவில் பிரபல நடிகையான அமண்டா பைனஸீக்கு(Amanda Bynes) 36 வயதாகிறது. இவர் 1990, 2000ம் காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
@FPJ
ஹாலிவுட் படங்களான ஈஸி ஏ, ஷீ இஸ் தி மேன், வாட் ஏ கேர்ள் வான்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து நிறைய ரசிகர் மனதைக் கொள்ளை கொண்டவர்.
அமண்டா பைனீஸ் நல்ல நடிகையாக அறியப்பட்டிருந்தாலும் அவர் ஒரு சில காரணங்களால் மேலும் தொடர்ந்து நடிக்கவில்லை.
நிர்வாணமாய் நடந்து சென்ற நடிகை
இந்நிலையில் அமண்டா பைனஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார். அவர் திடீரென லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் சாலைகளில் உடலில் ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக தெருவில் நடந்து சென்றுள்ளார்.
@instagram
இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி அதன் ஓட்டுநர்களிடம் பேசியுள்ளார்.
மனநல பிரச்சனை
அப்போது ஓட்டுநர் ஒருவரிடம் தான் மனநல காப்பகத்திலிருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். பொலிஸார் விரைந்து சென்று அமண்டா பைனஸை மீட்டனர்.
@nnn.ng
இதையடுத்து மனநல நிபுணர் அவரை பரிசோதித்துப் பார்த்துள்ளனர். அப்போது அவர் ‛பைபோலார் டிஸ்சார்டர்' எனும் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மனநல காப்பகத்தில் சிகிச்சை
இதையடுத்து பொலிஸார் அவரை மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு 3 நாள் சிகிச்சை தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
ஒருவேளை அவர் பாதிப்பிலிருந்து மீளாவிட்டால் கூடுதல் காலம் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
@instagram
மேலும் தற்போது அவரை காப்பகத்தில் வைத்து மனநல பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு அமண்டா மனநல சிகிச்சையிலிருந்ததாகவும், சமீபத்தில் அவர் சிகிச்சையை கைவிட்ட நிலையில் பிரச்சனையை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.