சமீபத்தில் கணவர் மறுமணம் செய்த நிலையில் புதுப்பெண்ணை புகழ்ந்து தள்ளிய கோடீஸ்வரியான முதல் மனைவி! ஒரு ஆச்சரிய சம்பவம்
பிரபல நடிகையும் கோடீஸ்வர பெண்ணுமான டிரூ பேரிமோர் தனது முன்னாள் கணவரின் இரண்டாவது மனைவியை பெரியளவில் பாராட்டி அவர் குறித்து வியந்து பேசியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நடிகையான டிரூ பேரிமோரின் சொத்து மதிப்பு $125 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. அவருக்கும் வில் கோபில்மேன் என்ற நடிகருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2016ல் டிரூ - வில் தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நிலையில் 43 வயதான வில் சமீபத்தில் 33 வயதான மிச்லெர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மிச்லெர் குறித்து எதிர்மறையாக டிரூ பேசுவார் என பலரும் நினைத்த நிலையில் அதை பொய்யாக்கும் விதத்தில் சமீபத்தில் பேசி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
டிரூ கூறுகையில், ஒரு அற்புதமான பெண்ணை, வில் திருமணம் செய்து கொண்டுள்ளார். நான் அவளை எப்போதும் ஊக்கப்படுத்துவேன், அவர்களுடன் நட்பாக இருப்பேன். அதே சமயம் அவர்களின் தனிப்பட்ட இடம் அவர்களுக்கு எப்போதும் இருக்கும், அதில் நான் நுழையமாட்டேன்.
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் மிச்லெர், வில்லின் வாழ்க்கையில் வந்ததோடு என் மகள்களுடன் நன்றாக பழகுகிறாள்.
என் கணவர் அவளுடன் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.