50 நாட்களில் 14 கிலோ எடையை குறைத்த அறந்தாங்கி நிஷா.., எப்படி தெரியுமா?
அறந்தாங்கி நிஷா பிரபல பெண் தொகுப்பாளினி மற்றும் நகைச்சுவை நடிகை.
பட்டிமன்றங்கள், மேடைப் பேச்சுகளின் மூலம் கவனம் ஈர்த்த இவர் பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
மேலும் ஜெயிலர், கோலமாவு கோகிலா 2, திருச்சிற்றம்பலம், ராயன், சீமராஜா போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து சின்னத்திரை தொடர்களிலும் நடித்த இவர் தற்போது விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் அடிக்கடி வருகிறார்.
கருப்பு ரோஜா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி, சமையல் குறிப்புகள், Vlogs என பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது அறந்தாங்கி நிஷா மிகக்குறுகிய காலத்தில் எடை குறைத்துள்ளார்.
அந்தவகையில், அறந்தாங்கி நிஷா 50 நாட்களில் 14 கிலோ எடையை குறைத்தது எப்படி என்று பார்க்கலாம்.

பொதுவாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள், மன அழுத்தம், மாத்திரைகளின் பக்கவிளைவுகள் என உடல் எடைக்கு பல காரணங்கள் உண்டு.
இந்நிலையில், நிஷா கடந்த சில மாதங்களாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, உடல் எடை குறைத்ததாக அவருடைய யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
எனவே உணவுமுறை மூலமாகவே அவர் எடை குறைத்திருப்பார் என சொல்லப்படுகிறது. நிபுணர் பரிந்துரையின் கீழ் அவர் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு எடையை குறைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |