கழுத்தில் காயங்களுடன் பிரபல நடிகை மர்ம மரணம்.., ஆண் நண்பரை தேடும் பொலிஸார்
பிரபல வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு (37) கழுத்தில் காயங்களுடன் மர்ம மரணம் அடைந்திருப்பது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை மரணம்
கடந்த 2 -ம் திகதி பிரபல வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு நண்பர் ஒருவரால் டாக்காவில் உள்ள உத்தாரா அதுநிக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அப்போது அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதில், நடிகை ஹுமைரா ஹிமு கழுத்தில் காயங்களுடன் இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே, நடிகைக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டிருக்கும் போதே, அவரை மருத்துவமனையில் சேர்த்த நண்பர் புறப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனால், அந்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். இருப்பினும், நடிகை ஹுமைரா ஹிமு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகத்தில் உள்ளனர். ஏனென்றால், ஹுமைரா ஹிமு மரணமடைந்த அன்று தனது ஆண் நண்பருடன் சன்டை போட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, ஹுமைரா ஹிமுவின் உடலுக்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும்.
இதற்கிடையில், ஹுமைரா ஹிமுவுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாததால், அவரது அத்தையை தொடர்புகொள்ள பொலிஸார் முயற்சித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |