பிரபல தமிழ் திரைப்பட நடிகையின் மகனான வாரிசு நடிகரின் பேச்சில் மயங்கிய கோடீஸ்வரர்! அம்பலமான மெகா மோசடி.. புகைப்படம்
சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் கோடீஸ்வர் ஒருவரிடம் பல கோடிகளை சுருட்டிய நடிகை ஜெயசித்ராவின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசித்ரா.
இவர் மகன் அம்ரீஷ் தமிழ் திரையுலகில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார்.
சினிமா மற்றும் சீரியல்களுக்கு பங்களாக்களை வாடகைக்கு விடும் கோடீஸ்வரரான சென்னையை சேர்ந்த நெடுமாறனை சந்தித்த அம்ரீஷ் பெரம்பலூர் ராஜவம்சத்திடம் 250 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் உள்ளது என கூறியுள்ளார்.
அதனை மலேசிய நிறுவனம் என்மூலம் வாங்க இருக்கிறது. அந்த ராஜ வம்சத்தினரிடம் இருந்து இருடியத்தை வாங்குவதற்கு 60 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்தால் 160 கோடி ரூபாய் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார்.
அதன் பின்னர் இரு வெளி நாட்டுக்காரர்களை அழைத்து வந்து இவர்கள் மலேசியாவில் இருந்து வந்திருப்பதாக கூறி அந்த இரிடியத்தை விலைக்கு வாங்க தயாராக இருப்பதாக கூறி நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்
திடீரென ஒரு நாள் இரிடியம் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்வதாக கூறி மலேசியாவுக்கு சிறப்பு விமானத்தில் நெடுமாறனை அழைத்து சென்றார்.
2015 ஆம் ஆண்டுவரை கொஞ்சம் கொஞ்சமாக 24 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்ட அம்ரீஷ் அதன் பின் இருடியம் இதோ வருகிறது, வரி பிரச்சனை அப்படின்னு சொல்லி தன்னை ஏமாற்றி வந்துள்ளார்.
இறுதியாக மலேசியா காரர்கள் ஏமாற்றிவிட்டதாக நெடுமாறனிடம் நாடகமாடிய நிலையிலேயே அவர் பொலிசில் புகார் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து பொலிசார் அம்ரீஷை கைது செய்தனர். விசாரணையில், அம்ரீஷ் நடிகர்களை வைத்து உண்மை போல நடிக்க வைத்து இந்த மெகா மோசடியை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.