மிகவும் எதிர்பார்த்த தொகுதி கைவிட்டு போனதால் ஏமாந்து போன நடிகை குஷ்பு! உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு
பாஜக குஷ்பு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஏமாந்து போன குஷ்பு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை அதிமுக - பாஜக - பாமக கூட்டணி இணைந்து சந்திக்கவுள்ளது. இதில் சென்னையில் உள்ள சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என கூறப்பட்டது.
மேலும் அக்கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு அங்கு கடந்த மூன்று மாதங்களாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
Want to thank each n everyone of those who have stood by me in my journey n trusted me to bring in a change n do better. Will be indebted. Last 3 months was beautiful, enriching, learning n a lesson to become a better person. My relationship with #ChepaukTriplicane is for life.
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 11, 2021
இந்த நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை அதிமுக தலைமை பாமகவுக்கு ஒதுக்கியது.
இதனால் குஷ்பு கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் டுவிட்டரில் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
மாற்றத்தை கொண்டு வருவதற்கு நம்பி என் ஒவ்வொரு பயணத்திலும் என்னுடன் நின்ற அனைவருக்கும் நன்றி.
கடந்த 3 மாதங்கள் அழகாக இருந்தன, ஒரு சிறந்த நபராக மாறுவதற்கு ஒரு பாடம் கற்றேன். சேப்பாக்காம் - திருவல்லிக்கேணியுடன் என் பந்தம் வாழ்வு முழுவதும் தொடரும் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதால் குஷ்பு பாஜகவுக்கு தாவினார் என கூறப்பட்ட நிலையில் தற்போது பாஜகவிலும் அவருக்கான அங்கிகாரம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.