நடிகை நக்மாவால் கங்குலி திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சுனாமி! விவாகரத்து முடிவுக்கு வந்த மனைவி... இருவருக்கும் இடையிலான கதை என்ன?
இந்தியாவில் வெறித்தனமாக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டது இரண்டு தான். ஒன்று கிரிக்கெட், மற்றொன்று சினிமா.
அப்படிப்பட்ட இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு உதரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் சினிமா நாயகிகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர். நடிகைகளை திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீரர்கள் விவகாரத்தும் செய்துள்ளனர்.
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சவுரவ் கங்குலியின் வாழ்க்கையில் மினி சுனாமியை ஏற்படுத்திய நாயகியாக நக்மா இருந்தார்.
இந்திய அணியின் கேப்டனாக இருந்து பல சாதனைகளை புரிந்த சவுரவ் கங்குலி திருமணத்திற்கு பிறகு நடிகை நக்மாவை காதலிப்பதாக தகவல்கள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக இருந்த புகைப்படங்களும் அந்த காலக்கட்டத்தில் வெளியாகின. நடிகை நக்மா உடன் சவுரவ் கங்குலி டேட்டிங் செய்கிறார் என்ற செய்தி அப்போதைய பரபரப்பு செய்தியாக இருந்தது.
கங்குலி 1997-ம் ஆண்டு அவரது காதலி டோனாவை திருமணம் செய்தார். அதன்பின் நக்மா உடன் டேட்டிங் என்ற செய்தி அவர்கள் திருமணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சவுரவ் கங்குலியும் நக்மாவும் சென்னயைில் இருக்கும் ஒரு கோவிலில் காணப்பட்டார்கள்.
இதனால் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்று வதந்தி பரவ ஆரம்பித்தது. இதனால் கங்கலியின் மனைவி டோனா விவகாரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
நக்மா - கங்குலி விவகாரம் சில நாட்களுக்கு நீடித்த பின்னர் இவர்கள் டேட்டிங் செய்து வருவதாக வந்த தகவலை இருவரும் மறுத்தனர். நக்மா - கங்குலியின் விவகாரமும் முடிவுக்கு வந்தது.
கங்குலி உடனான உறவு குறித்து நடிகை நக்மாவும் சில பேட்டிகளில் பதிலளித்துள்ளார். 46 வயதான நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.