விபத்தில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம்: பிரபல நடிகை கைது
பிரபல அஸ்ஸாம் நடிகை ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய நடிகை
நந்தினி காஷ்யப் பிரபல அஸ்ஸாமி நடிகை ஆவார். இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 25ஆம் திகதி, நந்தினி ஓட்டிவந்த கார் Samiul Haque (21) என்னும் மாணவர் மீது மோதியுள்ளது.
கார் மோதியதும் காரை நிறுத்தாமல் சென்ற நந்தினி, தனது வீட்டுக்குச் சென்று காரை மறைத்துவைக்க முயன்றுள்ளார். அதை வீடியோ எடுத்த ஒருவரையும் நந்தினி தாக்கியுள்ளார்.

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்!
படுகாயமடைந்த Samiul, Gauhati மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று, அதாவது, ஜூலை மாதம் 29ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |