நடிகை ரம்யா பாண்டியனுக்கு காதல் திருமணம்.., மாப்பிள்ளை யார் தெரியுமா?
தமிழ்நாட்டில் பிரபலமான நடிகையாக வலம்வருபவர் நடிகை ரம்யா பாண்டியன்.
ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.
ரம்யா பாண்டியன், பிரபல நடிகரான அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார்.
இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, இவருக்கான ரசிகர் பட்டாளத்தை மேலும் அதிகரித்தது.
நடிகை ரம்யா பாண்டியனுக்கு இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்.
இந்நிலையில், ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. லவ்வெல் தவான் என்பாரைத்தான் காதல் திருமணம் செய்யப்போகிறார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் யோகா மாஸ்டராக பணியாற்றி வருகிறாராம். யோகா கிளாஸின் மூலம்தான் இவர்கள் சந்தித்து காதலிக்க தொடங்கியுள்ளனர்.
இவர்களது திருமணம் அடுத்த மாதம் ரிஷிகேஷில் நடக்கவுள்ளது. பின் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |