மகளிர் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றிய இந்தியா: முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான நடிகை நெகிழ்ச்சி
மகளிர் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியுள்ளது இந்திய அணி.
ஒரு காலத்தில், பெண்கள் அணிதானே என சிலரால் புறக்கணிக்கப்பட்ட அணிக்கு, இன்று பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான நடிகை நெகிழ்ச்சி
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும் இந்நாள் நடிகையுமான சையாமி கெர் (Saiyami Kher) சமூக ஊடகம் ஒன்றில் பெண்கள் அணியின் வெற்றி குறித்த நெகிழ்ச்சி இடுகை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிறுவயதில், தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்து, ஆர்வத்தில் கிரிக்கெட் விளையாட விரும்பியபோது, பையன்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். அப்புறம் கிரிக்கெட் விளையாடி அவர்கள் அனைவரையும் தோற்கடித்தேன் என்கிறார் சையாமி.
பின்னாட்களில் மஹாராஷ்ட்ரா அணிக்காக விளையாடிய சையாமி ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

பின்னர் கிரிக்கெட்டை விட்டு நடிக்கவந்தாலும், Ghoomer என்னும் திரைப்படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தார் சையானி.
தான் நடித்த அந்த திரைப்படம் எடுக்கப்பட்ட அதே விளையாட்டு அரங்கத்தில் நேற்று நம் பிள்ளைகள் உண்மையாகவே உலகக் கிண்ணத்தை கைகளில் தூக்கிக் காட்டியபோது, அது நெகிழவைக்கும் ஒரு தருணமாக இருந்தது என்கிறார் சையானி.
அந்த நெகிழ்ச்சி சையானிக்கு மட்டுமல்ல என்பது நேற்று கிரிக்கெட் போட்டியைக் கண்ட அனைவருக்கும் புரிந்திருக்கும், ஒவ்வொருவரும் தன் வீட்டுப் பிள்ளை, தங்கள் மகள்கள் உலகக் கிண்ணத்தை வென்றதைப்போலவே உணர்ந்திருப்பார்கள் என்பதை மறுக்கமுடியாது.
மேலும், நேற்று கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்திய பெண்கள் அணியைக் கண்ட பிள்ளைகள் பலருக்கும், நாமும் இதேபோல கிரிக்கெட் விளையாடி வெற்றிபெறவேண்டும் என்ற உணர்வை அது ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |