600 படிகட்டுகளில் கற்பூரம் ஏற்றி நடிகை சமந்தா வழிபாடு! உடல் நலம் பெற வேண்டி பழனியில் சாமி தரிசனம்
பிரபல திரைப்பட நடிகை சமந்தா தனது உடல்நலம் பூரண குணமடைய வேண்டி பழனி முருகன் திருக்கோயில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார்.
மயோசிடிஸ் நோய்
மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமந்தா அறிவித்து இருந்த நிலையில், நீண்ட நாட்களாக அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் மருத்துவ சிகிச்சைக்கு இடையிலும் தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்பது மற்றும் புரமோஷன்களில் கலந்து கொள்வது என தனது அர்ப்பணிப்பு கடமையை தவறாமல் செய்து வந்தார்.
இதற்கிடையில் நடிகை சமந்தா பொதுவெளிகளில் தோன்று போதும், திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் வழிபாடு
இந்நிலையில் தனது உடல்நலம் பூரண குணமடைய வேண்டி பழனி முருகன் திருக்கோயில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி நடிகை சமந்தா வழிபாடு செய்தார்.
நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலில் உள்ள 600 படிகட்டுகளிலும் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரவி வரும் நிலையில், சமந்தாவின் ரசிகர்கள் விரைவில் நீங்கள் பூரண குணமடைவீர்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.