விமானத்தில் அமளியில் இறங்கிய ஹாலிவுட் நடிகை: நடுவானில் விமான கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு
Actress Selma Blair Attacked Flight Attendants in Midsky: டெல்லா விமானத்தில் ஏற்பட்ட தகராறுக்கு பிறகு பிரபல ஹாலிவுட் நடிகை செல்மா பிளேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் தகராறு
ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நகரின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையம் நோக்கி பறந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் கடும் அமளி ஈடுபட்டதாக புகார் பதிவானது.
பின்னர் நியூயார்க் துறைமுக அதிகாரிகள் வழங்கிய தகவலில், 54 வயது பிரபல ஹாலிவுட் நடிகையான செல்மா பிளேர், விமானத்தில் பணிப்பெண்களை தாக்க முயன்று அவர்களை கடிக்கவும் முயற்சித்துள்ளார்.

மேலும் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களுக்கு காயம் ஏற்பட்டதுடன், ஒருவருக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஹாலிவுட் நடிகை கைது
இதையடுத்து விமான தரையிறங்கியது ஹாலிவுட் நடிகை செல்மா பிளேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மேலும் பரிசோதனைகளுக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையில் நடிகை தரப்பு தெரிவித்துள்ள தகவலில், செல்மா பிளேர் அவசர கால மருத்துவ சிக்கலை எதிர்கொண்டார். அதன் காரணமாகவே அவரின் இந்த செயல்முறை நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.