என்னை பார்த்துகொண்டே இறந்துவிட்டார்! அம்மாவின் சாவிற்கு நான்தான் காரணம்..கதறி அழும் சிந்துவின் மகள்
அம்மாவின் இறப்பிற்கு காரணமே நான்தான் என்று, மறைந்த நடிகை சிந்துவின் மகள் பவித்ரா கதறி அழுதபடி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
சிந்துவின் மரணம்
அங்காடி தெரு படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து. இவருக்கு எதிர்பாராதவிதமாக புற்றுநோய் ஏற்பட்டதால் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார்.
அவரால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற போதிய வசதி இல்லாததால் வீட்டிலேயே தனது சிகிச்சையை எடுத்து வந்துள்ளார்.
ஆனால், உடல்நிலை மிகவும் மோசமானதால் சென்னை கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவு திரைத்துறையில் உள்ள அனைவருக்கிடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மோசமான உடல்நிலை
இந்நிலையில், சிந்துவின் மகள் பவித்ரா யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில் கடந்த 3 மாதங்களாக அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் அவர்களால் சாப்பிடக்கூட முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'அம்மாவை ஓமாந்தூரார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தோம். அங்கு போதிய வசதி இல்லாததால் பின் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொன்னார்கள்.
அவர் சென்னை அரசு மருத்துவமனைக்கு செல்ல விரும்பாததால், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். அம்மாவிற்கு நுரையீரலில் கட்டி மற்றும் தண்ணீர் இருந்ததால் அதை எடுத்தார்கள்.
மேலும் அம்மாவின் சிறுநீரகம் செயலிழந்தது, பின் ஒவ்வொரு உறுப்பும் செயலிழந்து மூளைச்சாவு அடைந்து, கண் மட்டும் அசைத்து என்னை பார்த்துகொண்டே இறந்துவிட்டார்கள்.
என்னால் தான் அம்மாவிற்கு இந்த நிலைமை என் கணவர் கடந்த பொங்கல் தினத்தன்று மாரடைப்பால் உயிழந்தார். என் அம்மா தான் எல்லாமே என்று வாழ்ந்து வந்தேன், இப்போது அவங்களும் என்னை விட்டு போய்ட்டாங்க.இனி நான் கைக்குழந்தையை வைத்து கொண்டு எப்படி வாழப்போகிறேன் என்று தெரியவில்லை.
என் அம்மாவை விட்டு போகாமல் அவர்கள் கூடயே இருந்திருந்தால் அவர் இறந்திருக்கமாட்டார்கள். அதை நினைத்து தினம் தினம் செத்துகொண்டு தான் இருக்கிறேன்' என சிந்துவின் மகள் பவித்ரா கதறி அழுதபடி பேட்டி கொடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |