இறக்கும் முன் சிந்து பேசியது என்ன? ரோபோ சங்கர் உருக்கம்
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் அங்காடித்தெரு. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து.
இவர் சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து வந்ததோடு, கொரோனா காலக்கட்டத்தில் உணவின்றி தவித்து வந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார்.
மேலும் சமூக சேவைகளிலும் அதிகம் ஈடுபட்டு வந்தார், சிந்துவுக்கு கொரோனா காலத்தில் திடீரென புற்றுநோய் பாதிப்பு ஏற்பட அதற்கான சிகிச்சைகளை எடுத்து வந்தார்.
மருத்துவமனையில் செலவு செய்ய போதிய பணம் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து உடல்நிலை மோசமான நிலையில் இவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார், தற்போது சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சிந்துவின் இறப்பிற்கு திரையுலகினர்கள், ரசிகர்கள் என பலர் ஆழ்ந்த சோகத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் அவருக்கு உதவி செய்தோம் என்று யாருக்கும் தெரிவிக்கவில்லை.
அவர் எங்களுடன் பிறந்த அக்கா போன்றவர். சின்னத்திரையும் பெரிய திரையும் அவருக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறது.
இவருடைய இழப்பு எங்களுக்கு இரண்டு பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. ஒன்று நமது உடலை நாம் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு நாம் சேமித்ததற்கு பின்னர் தான் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.
சிந்து அவருக்கு வந்த வருமானத்தில் மாத்திரை மற்றும் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீதி உள்ள காசில் பிறருக்கு உதவி செய்து வந்தார். தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் சிந்துவோ அப்படிச் செய்யவில்லை.
சமீப இரண்டு மாதங்களாக அவர் பட்ட அவஸ்தையை கண் முன்னே கண்டோம். நாங்கள் கடவுளிடம் அவருக்கு நிம்மதியான ஒரு உறக்கத்தை கொடுங்கள், என்று தான் கேட்டோம். காரணம் அவர் அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்” என்று ரோபோசங்கரின் மனைவி கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |