மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகை சிந்து மரணம்! திரையுலகினர் கண்ணீர்
அங்காடித் தெரு நடிகை சிந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 42 வயதில் உயிரிழந்தார்.
புற்றுநோய் பாதிப்பு
தமிழில் அங்காடித் தெரு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சிந்து. சில படங்களில் நடித்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
அதற்காக சிகிச்சை பெற்று வந்த சிந்துவுக்கு மார்பகங்கள் அகற்றப்பட்டன. பல பேட்டிகளில் தன்னுடைய வேதனையை தெரிவித்த அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
சிந்து அதிர்ச்சி மரணம்
இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிச் சடங்கு இன்று மின் மயானத்தில் நடைபெற உள்ளது.
நடிகை சிந்துவின் மரணம் திரையுலகினர், ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |