பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
actress Sowcar Janaki passed away: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
செளகார் ஜானகி காலமானார்
1931 ஆம் ஆண்டில் ஆந்திராவில் பிறந்தவர் நடிகை சௌகார் ஜானகி. இவரின் சகோதரி கிருஷ்ண குமாரியும் புகழ்பெற்ற நடிகை ஆவார்.

1950 ஆம் ஆண்டில் சௌகார் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் திரையுலகிற்கு அறிமுகமானார். 1952 ஆம் ஆண்டில் வளையாபதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் ஆந்திராவை சேர்ந்த என்.டி.ராமராவ், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் நடித்துள்ளார்.
தனது நடிப்பிற்காக நந்தி விருதுகள், கலைமாமணி விருது ஆகியவற்றை பெற்றதோடு, இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
94 வயதான இவர், கடந்த சில நாட்களாக வயது மூப்பு மற்றும் மோசமான உடல் நிலை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது சிகிச்சை பலனின்றி சௌகார் ஜானகி மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |