எம்.பி மகன் ஒட்டிய கார் மோதி இளம்பெண் உயிரிழப்பு - கைது செய்யாத காவல்துறை
MP son aston martin car crash : ஹைதராபாத்தில் எம்.பியின் மகன் ஒட்டிய கார் மோதி இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
எம்.பி மகன் ஒட்டிய கார் மோதி இளம்பெண் உயிரிழப்பு
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை சேர்ந்த லிங்கமனேனி ரமேஷ்(Lingamaneni ramesh) என்பவர் ராஜ்யசபா எம்பி ஆக உள்ளார்.

இவரின் மகன் 21 வயதான லிங்கமனேனி சஞ்சுஸ்(Lingamaneni Sanjush) கடந்த 16 ஆம் திகதி ஹைதராபாத்தின் மதாபூரில் உள்ள இன்ஆர்பிட் வணிக வளாகம் அருகே தனது ஆஸ்டன் மார்ட்டின்(aston martin) காரை ஓட்டிச் சென்றபோது, மாலை 3 மணியளவில் சாலையை கடந்து கொண்டிருந்த இளம்பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
உடனடியாக அதே காரில் அந்த பெண்ணை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த 26 வயதான பாரதி முகி(Bharati Mukhi) என்ற பெண் அங்குள்ள வணிக வளாகத்தில் பணியாற்றி வந்துள்ளார். உணவு வாங்கிவிட்டு பணிக்கு திரும்ப வரும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்போது வரை விபத்தை ஏற்படுத்திய லிங்கமனேனி சஞ்சுஸை கைது செய்யவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாதப்பூர் ஏசிபி சி. ஸ்ரீதர், " சஞ்சுஷ் மீது பதிவு செய்யப்பட்ட குற்றம் பிணை வழங்கக்கூடியது என்பதாலும், அதற்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனையே விதிக்கப்படலாம் என்பதாலும் அவர் கைது செய்யப்படவில்லை, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்" என்று கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |