நடிகை த்ரிஷாவின் அழகின் ரகசியம் இதுதான்: நீங்களும் இளமையான சரும அழகை பெற இதை செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. பல ரசிகர்களுக்கும் இன்றும் இவர் கனவுக்கன்னியாக இருக்கிறார்.
இத்தனை ஆண்டுகள் கடந்தும், அதே மெருகேற்றிய அழகு குறையாமல் அப்படியே இருக்கிறாரே என நம்மில் பலர் நினைத்திருப்போம்.
த்ரிஷா இளமையுடன் பொலிவாக இருக்க த்ரிஷாவின் அழகின் ரகசியம் என்ன என்பதை பற்றி இந்த குறிப்பில் விரிவாக காணலாம்.

த்ரிஷாவின் அழகின் ரகசியம்
த்ரிஷா இளமையுடனும், பொலிவுடனும் இருக்க மிக முக்கிய காரணம், அவரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான்.
டயட்டில் தினமும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துவார். மேலும் ஜங்க்புட்உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவார்.
தினமும் காலை க்ரீன் டீ அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் சீவிய இஞ்சியை கலந்து குடித்த பின்பு தான் நாளையே தொடங்குவார்.

விட்டமின் சி அதிகம் உள்ள லெமன், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் தனது சருமத்தில் பெரிய அளவிலான முன்னேற்றத்தை கண்டதாக கூறுகிறார்.
அதிகம் மேக்கப் போடுவதை விரும்பாத இவர் பெரும்பாலும் ஐ-லைனர் மற்றும் லிப்பாம் பயன்படுத்துவதையே விரும்புவாராம்.
 
    
    முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து நீளமான அடர்த்தியான கூந்தலுக்கு Protein Hairpack: எப்படி தயாரிப்பது?
ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்க டயட்டுடன் சேர்த்து தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்கமாட்டார்.
சருமத்தை இளமை குறையாமல் , பொலிவுடன் வைத்திருக்க தினமும் அதிக அளவிலான தண்ணீர் குடிப்பது தான் சிறந்தது என கூறுகிறார் த்ரிஷா.

உடலுக்கு தேவையான ஓய்வை வழங்க வேண்டும் என்று அக்கறை காட்டும் இவர் தினமும் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை நிச்சயம் தூங்கிவிடுவார்.
சரும ஆரோகியத்திற்கு கேடுவிளைவிக்கும் சர்க்கரையை எந்த ஒரு உணவிலும் எடுத்துக்கொல்லாமல் முற்றிலும் தவிர்த்து விடுவார்.
அன்றாட உடற்பயிரிச்சி, ஆரோக்கியமான உணவுமுறை, 8 மணி நேர உரக்கம், யோகா இவைதான் த்ரிஷாவின் டாப் பியூட்டி சீக்ரெட்டாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        