இந்திய கடற்படைக்கு Drishti-10 Starliner Drone வழங்கிய அதானி நிறுவனம்.., இதன் சிறப்பம்சங்கள்
இந்திய கடற்படைக்கு இரண்டாவது திருஷ்டி-10 ஸ்டார்லைனர் ட்ரோனை (Drishti-10 Starliner Drone) அதானி டிபென்ஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
Drishti-10 Starliner Drone
ராணுவ தளவாட தயாரிப்பில் அதானி டிபன்ஸ் (Adani Defence) மற்றும் ஏரோஸ்பேஸ் (Aerospace) நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனமானது ஹைதராபாத்தில் உள்ள மையத்தில் Drishti-10 Starliner Drone தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில், முதலாவதாக தயாரித்த ட்ரோனை கடற்படைக்கு கடந்த ஜனவரி மாதமும், 2-வது ட்ரோனை தரைப்படைக்கு கடந்த ஜூன் மாதமும் விநியோகித்தது.
இந்நிலையில், 3-வதாக தயாரித்த ட்ரோனை இரண்டாவது முறையாக இந்திய கடற்படைக்கு விநியோகம் செய்துள்ளது.
இது, 32 ஆயிரம் அடிக்கு மேல் தொடர்ந்து 48 மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்டது. மேலும், இந்த ட்ரோனால் 450 கிலோ எடை வரை சுமந்து செல்ல முடியும்.
இது, இஸ்ரேலின் ஹெர்மெஸ் 900 (Hermes 900) ட்ரோனுக்கு நிகரானது. இந்த திருஷ்டி-10 ஸ்டார்லைனர் ட்ரோனை (Drishti-10 Starliner Drone) அனைத்து வானிலை நிலைகளிலும் இயக்க முடியும்.
இது, UAV அமைப்பின் விமானத் தகுதிக்கான நேட்டோவின் STANAG 4671 சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த சான்றிதழானது பிளாட்பார்ம் பிரிக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்படாத வான்வெளியில் பறக்க அனுமதிக்கிறது.
இந்த ட்ரோன் குஜராத்தில் உள்ள போர்பந்தரில் கடற்படை நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கப்படுகிறது. கடற்படையின் கண்காணிப்பு மற்றும் உளவு பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளதால் கடற்கொள்ளையும் குறைய வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |