வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த ஓக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அந்தவகையில், கடந்த நவம்பர் மாதம் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றது.
முக்கியமாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் தாக்கம் அதிகரித்ததால் கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பல குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன. இந்த மண்சரிவில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நாளை (7ம் திகதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு, வடமேற்கு திசையில் நகரக் கூடும். பின்னர், 12ம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு - இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |