இலங்கை துறைமுக திட்டம்: அமெரிக்க நிதியை கைவிடும் அதானி குழுமம்!
அமெரிக்க விசாரணைகளின் காரணமாக இலங்கை துறைமுக திட்டத்திற்கான அமெரிக்க நிதியை அதானி துறைமுகம் கைவிட்டுள்ளது.
அமெரிக்க நிதியை கைவிட்ட அதானி
அமெரிக்காவில் எழுந்த பங்குச் சந்தை மோசடி மற்றும் மின்னஞ்சல் மோசடி குற்றச்சாட்டுகளின் காரணமாக, இலங்கையில் முக்கியமான துறைமுக திட்டத்திற்காக அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி கழகம் (IDFC) உடன் செய்த நிதி ஒப்பந்தத்தில் இருந்து அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் விலகியுள்ளது.
கடந்த நவம்பரில், கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தை மேம்படுத்துவதற்காக அதானி குழுமத்திற்கு 553 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை IDFC(International Development Finance Corporation) அங்கீகரித்திருந்தது.
இருப்பினும், அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை அதானி குழுமம் எதிர்கொள்ளும் நிலையில், அதானி துறைமுகங்கள் தனது தற்போதைய மூலதன வளங்களைப் பயன்படுத்தி, திட்டத்திற்கு உள்நாட்டிலேயே நிதியளிக்க முடிவு செய்துள்ளது.
இந்த நிதியளிப்பு மாற்றம் இருந்தபோதிலும், திட்டம் தடையில்லாமல் முன்னேறி வருவதாகவும், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதானி துறைமுகங்கள் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |