ஹிஜாப் அணியாமல் ஆன்லைனில் கச்சேரி நடத்திய ஈரானிய பாடகி! ஈரான் நீதித்துறை அதிரடி நடவடிக்கை
ஈரான் பாடகி ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடியதை அடுத்து அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அந்த நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது.
சர்ச்சை கிளப்பியுள்ள ஈரான் பாடகி விவகாரம்
ஈரானிய பாடகி பரஸ்டு அஹமதி(Parastoo Ahmadi), ஆன்லைன் கச்சேரியில் ஹிஜாப் அணியாமல் பாடியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் நீதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமிய குடியரசான ஈரானில் பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Iranian singer, Parastoo Ahmadi, has performed without her hijab in a livestream on Youtube.
— Channel 4 News (@Channel4News) December 13, 2024
Iran’s ‘morality laws’ make it mandatory for women to wear hijabs and they are not allowed to sing in public, meaning she risks years of imprisonment. pic.twitter.com/s4KryTt8tT
இந்நிலையில் இந்த சட்டத்தை மீறியதற்காக பாடகி பரஸ்டு அஹமதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதித்துறை தெரிவித்துள்ளது.
என் ஆசையை கைவிட மாட்டேன்!
கடந்த 11ம் திகதி நடந்த தனது இசை நிகழ்ச்சியில், அஹமதி, "நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை இருந்தாலும், என் ஆசையை கைவிட மாட்டேன்" எனக் கூறி, ஈரானின் கலைச் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஈரானில் பெண்கள் பொதுவெளியில் பாட்டு பாடுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பரஸ்டு அஹமதி இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது, அஹமதி இந்த சம்பவத்தை கண்டித்து பாடல்களை வெளியிட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |