ஒரே நாளில் ரூ.299 கோடி- கெளதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்வு
தொழிலதிபர் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.299 கோடி உயர்ந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணியமான SEBI, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து அதானி குழுமத்தை முற்றிலுமாக விடுவித்ததையடுத்து, கெளதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 299 கோடி உயர்ந்துள்ளது.
இந்தத் தகவல் பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் வெள்ளிக்கிழமை அதிகரித்தன. குறிப்பாக Adani Power பங்கு 13.42 சதவீதம் உயர்ந்து ரூ.416.10-ஐ அடைந்தது.
Adani Total Gas பங்கு 7.55 சதவீதம் உயர்ந்து ரூ.652.80-க்கு சென்றது மற்றும் Adani Enterprise மற்றும் Adani Green Energy பங்குகள் 5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன. மேலும், Adani Energy Solutions பங்கு 5 சதவீதம் உயர்ந்தது.
இதன்மூலம், அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.69,000 கோடியாக உயர்ந்தது.
இந்த வளர்ச்சி அதனை குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. SEBI-யின் தீர்மானம் பங்குச் சந்தையில் புதிய நம்பிக்கியை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Gautam Adani Net Worth, Adani group, Adani group stocks