கூடுதலாக F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டம்... ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்
கூடுதலாக F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
F-35 விமானங்கள்
இந்த விவகாரம் தொடர்பில் பொலிட்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையை அவர் மறுத்துள்ளார். ஜேர்மனி தங்களின் 85 பழைய டொர்னாடோ போர் விமானங்களை மாற்றுவதற்காக, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-35 போர் விமானங்களில் 35 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆனால், தற்போதைய சூழலில் கூடுதலாக F-35 விமானங்கள் வாங்கும் திட்டம் இல்லை என்றே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூடுதலாக 15 விமானங்கள் வாங்கும் திட்டம் இருந்ததாகவும், ஆனால் கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் 35 எண்ணிக்கை என்பது போதுமானதாக இல்லை என்றும், இறுதியில் தேவைப்படும் கூடுதல் F-35 போர் விமானங்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஜேர்மனியும் பிரான்சும் இணைந்து FCAS போர் விமானங்களை தயாரிக்கும் திட்டம் இழுபறியாக இருப்பதை பொலிட்டிகோ சுட்டிக்காட்டியிருந்தது. மட்டுமின்றி, பிரான்சின் கோரிக்கையை ஏற்பதில் ஜேர்மனி இதுவரை ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும் பொலிட்டிகோ தகவல் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |