பிக் பாஷில் 83 ஓட்டங்களுக்கு சுருண்ட அணி! சம்பவம் செய்த ஸ்டோய்னிஸ் படை
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான BBL போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 83 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிர்ச்சி கொடுத்த டாம் கர்ரன்
மெல்போர்ன் ஸ்டார்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் போட்டி நடந்து வருகிறது.
Image: Getty Images
முதலில் களமிறங்கிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு டாம் கர்ரன் அதிர்ச்சி கொடுத்தார்.
Image: Getty Images
அவரது பந்துவீச்சில் அலெக்ஸ் கேரி (3), கிறிஸ் லின் (2) மற்றும் ஜேசன் சங்கா (3) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
83 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
அணித்தலைவர் மேத்யூ ஷார்ட் 8 ஓட்டங்களில் சிடில் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஓரளவு தாக்குப்பிடித்த லியாம் ஸ்காட் 18 ஓட்டங்களில் லியாம் ஸ்காட் ஓவரில் அவுட் ஆனார்.
Image: Getty Images
அதன் பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து வெளியேற, கேமரூன் போயஸ் 20 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டாக அவர் ஸ்டோய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 19.3 ஓவர்களில் 83 ஓட்டங்களே எடுத்தது. டாம் கர்ரன் (Tom Curran) 4 விக்கெட்டுகளும், ஸ்வெப்ஸன் 3 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Image: Getty Images
Image: Getty Images
Image: Getty Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |