இனி இந்திய அணியின் ஸ்பான்சர் Adidas தான் - BCCI அறிவிப்பு
இந்திய அணியின் புதிய டி-சர்ட் மற்றும் கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் ஐசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.
கிட் ஸ்பான்சர் அடிடாஸ் அறிவிப்பு
இந்திய அணிக்கு டி-சர்ட் மற்றும் கிரிக்கெட் சார்ந்த பிற பொருட்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020 வரை நைக் நிறுவனம் இருந்து வந்தது. கடந்த 2020ம் ஆண்டிலிருந்து ஸ்பான்சராக எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இருந்து வந்தது.
தற்போது இந்நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இந்நிலையில், இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், கிட் ஸ்பான்சராக அடிடாஸ் உடனான பிசிசிஐயின் கூட்டாண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் விளையாட்டை வளர்ப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். அடுத்த மாதம் ஜூன் 7-ம் தேதியிலிருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
I'm pleased to announce @BCCI's partnership with @adidas as a kit sponsor. We are committed to growing the game of cricket and could not be more excited to partner with one of the world’s leading sportswear brands. Welcome aboard, @adidas
— Jay Shah (@JayShah) May 22, 2023
BCCI announces Adidas as the new kit sponsor of Indian Cricket Team till 2028 pic.twitter.com/3JDHlC3SET
— Political Express (@Politicalexpre) May 22, 2023