தீபாவளி ஸ்பெஷல்: தித்திக்கும் சுவையில் அதிரசம்.., இலகுவாக செய்வது எப்படி?
தீபாவளி பலகாரம் என்றாலே அதிரசம் நிச்சயம் இடம்பெறும்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் அதிரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 2 கப்
- வெல்லம் - 2 கப்
- நெய் - 1 ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை நன்குக் கழுவி அரை மணி நேரம் ஊறிய பின் துணியில் அரிசியை பரப்பி காய விடவும்.
ஈரம் வற்றியதும் மிக்ஸியில் மைய அரைத்தபின் சல்லடைக் கொண்டு சலித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்ததாக வெல்லத்தை உடைத்து பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
பின் அதோடு அரைத்து சலித்து வைத்துள்ள மாவை கொட்டி கட்டியாகாதவாறு பதமாகக் கிளறவும்.
இதைத்தொடர்ந்து அதோடு ஏலக்காய் பொடி, நெய் ஊற்றி கிளறவும். மாவு சற்று இளகிய பதத்தில் இருக்க வேண்டும்.
தற்போது அந்த மாவை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி பருத்தித் துணியால் கட்டி இரண்டு நாட்கள் ஊறவிடவும்.
பின்னர் கையில் நெய் தடவிக் கொண்டு நன்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழை இலையில் நெய் தடவி அதில் மாவை அதிரசம் தட்டிக்கொள்ளுங்கள்.
அடுத்து தட்டி வைத்துள்ள அதிரச மாவை எண்ணெயில் போட்டு நன்கு சிவக்க பொறித்து எடுத்தால் சுவையான அதிரசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |