நியூசிலாந்து அணியில் இடம் பிடித்த தமிழ் வம்சாவளி வீரர் - கையில் ரஜினிகாந்தின் வசனம் டாட்டூ
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ODI மற்றும் 5 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ODI போட்டி, நாளை மறுநாள் பரோடாவில் நடைபெற உள்ளது.
ஆதித்ய அசோக்
இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில், தமிழக வம்சாவளி வீரரான ஆதித்ய அசோக் இடம் பெற்றுள்ளார்.

Credit :crictoday.com/
23 வயதான ஆதித்ய அசோக், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இவர் 4 வயதில் இருக்கும் போது, இவரது குடும்பம் நியூசிலாந்திற்கு இடம் பெயர்ந்துள்ளது.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆதித்ய அசோக், 2020 ஆம் ஆண்டு U19 உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.
2023 ஆம் ஆண்டில் UAE அணிக்கு எதிரான T20 போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பின்னர், வங்கதேசத்திற்கு எதிரான 2 ODI போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதுவரை 2 ODI ஒரு சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி, 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

Credit : IANS
2022-23 உள்நாட்டு தொடர்களில் அவரது சிறப்பான ஆட்டத்திற்காக ஆண்டின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார்.
சமீபத்தில், சென்னை வந்த அவர், CSK பயிற்சி மையத்தில் சுழற்பந்து வீச்சின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வந்தார்.

Credit : Deivarayan Muthu/ESPNcricinfo
மேலும், அவர் தனது இடது கையில் படையப்பா படத்தில் ரஜினிகாந்த் பேசிய என் வழி தனி வழி என்ற வசனத்தை டாட்டூ குத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |