ஆதித்யா எல்-1: ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ அறிவிப்பு!
ஆதித்யா எல்-1 தனது வேலையை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆதித்யா எல்1
ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணி அளவில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த திட்டத்தின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி பொறுப்பெடுத்துள்ளார். இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான் என்ற பெருமையை ஆதித்யா எல் 1 பெறும்.
இந்நிலையில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடங்கி தற்போது தகவல்களை சேமிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.
தகவலை சேகரிக்கும் ஆதித்யா எல்-1
பூமியில் இருந்து 50,000 கி.மீ தொலைவில் “STEPS” என்ற கருவி செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 18, 2023
Aditya-L1 has commenced collecting scientific data.
The sensors of the STEPS instrument have begun measuring supra-thermal and energetic ions and electrons at distances greater than 50,000 km from Earth.
This data helps scientists analyze the behaviour of… pic.twitter.com/kkLXFoy3Ri
மேலும் தகவலை சேகரித்த கருவியானது புவி வட்டபாதையில் சேகரித்த தரவு, பூமியின் துகள்கள், காந்தப்புலன் பற்றி பகுப்பாய்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |