இந்தியாவின் ஆதித்யா எல்-1 ஏவுதலை நேரில் பார்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்
ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வதை நேரில் பார்ப்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய திட்டம்
இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்கியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, இஸ்ரோவின் அடுத்த திட்டமான சூரியன் குறித்த ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 மிஷன் தயாராக உள்ளது.
source - Mashable
PSLV XL ராக்கெட் மூலம் இந்த விண்கலம் செப்டம்பர் 2ஆம் திகதி காலை 11.50 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தாவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
சூரியன் குறித்த ஆய்வில் இந்தியா மைல்கல் பதிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படும் ஆதித்யா எல்-1யின் ஏவுதலை பொதுமக்கள் நேரில் காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
- http://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இஸ்ரோவின் அதிகாரப்பூர்வத் தளத்திற்கு செல்லுங்கள்.
- உங்களின் ஆதார் கார்டு அல்லது அரசு அங்கீகரித்த இதர அடையாள அட்டை மற்றும் மொபைல் எண் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- இணையத்தில் Register பக்கத்தில் தேவையான தரவுகளை உள்ளிட்டு Pass பெற்றுக்கொள்ளலாம். ஒரு Pass-யில் இரண்டு பேர் வரை பதிவு செய்து கொள்ளலாம்.
ஒன்லைனில் பதிவு இன்று மதியம் 12 மணிக்கு மேல் தொடங்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |