நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
நிர்மலா தேவி வழக்கு
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018 -ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று (ஏப்.26) அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆஜராகவில்லை
இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29 -ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் இன்று முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகிய நிலையில் நிர்மலா தேவி ஆஜராகவில்லை.
அவர் நேற்று மாலை முதல் தலைமறைவு என்றும் கூறப்பட்டது. இருந்தாலும் உறுதி செய்யப்படாத நிலையில், நிர்மலா தேவி இன்று ஆஜராகாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |