இன்று வரிசையில் நிற்கவில்லை என்றால் வருடம் முழுவதும் நிற்க நேரிடும்: நடிகர் பிரகாஷ் ராஜ்
பெங்களூர் மத்திய தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் ஏதோ ஒரு மாற்றம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் என 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில் பெங்களூர் மத்திய தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார்.
ஏதோ மாற்றம் இருக்கிறது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ் பேசுகையில், "மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பதை பார்க்கையில் ஏதோ மாற்றம் இருக்கிறது என்று நினைக்கிறேன். வாக்களிப்பது மிகவும் முக்கியமான விடயம்.
நீங்கள் தேர்ந்தெடுக்க போகிறவர்கள் தான் எதிர்காலத்தை முடிவு செய்ய போகிறவர்கள். நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய்விடும்.
முதல் முறை வாக்காளர்களுக்கு இது அற்புதமான அனுபவம். இன்று ஒரு நாள் வரிசையில் நின்று வாக்களிக்க வில்லை என்றால் வருடம் முழுவதும் வரிசையில் நிற்க வேண்டியது தான்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |