'அதிமுக மாநாடு ஒரு புளியோதரை மாநாடு'! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்
தமிழக மாவட்டம், மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டை ஒரு புளியோதரை மாநாடு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக மாநாடு
மதுரையில் 'அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு' என்ற தலைப்பிடப்பட்ட அதிமுக மாநாட்டை எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்து தொடங்கப்பட்டது.
இந்த மாநாட்டில் மூன்று நாள்களுக்கு முன்பாகவே ஏ, பி, சி என்ற கவுண்டர்களில் உணவுகள் சமைக்கப்பட்டது. ஆனால், மாநாட்டிற்கு வந்தவர்கள் சூடாக இருந்த சாம்பார் சாதத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு புளியோதரையை சாப்பிடாமல் சென்றுள்ளனர்.
இதனால், அதிகளவு புளியோதரை வீணாகி கொட்டப்பட்டிருந்த நிகழ்வு அதிருப்தியை ஏற்படுத்தியது.
புளியோதரை மாநாடு
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்," டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமனம் செய்வதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறாக இருப்பதால் மக்கள் அவர் மீது கோபமாக உள்ளனர்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டை நான் புளியோதரை மாநாடாகவே பார்க்கிறேன். அங்கு, கலைநிகழ்ச்சிகள் மட்டுமே நடந்தது. அதனால், பெரிய மாற்றம் ஒன்றும் வரப்போவதில்லை" என்று விமர்சித்து பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |