அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது! வீட்டிற்குள் என்ன நடந்தது? வெளியான வீடியோ
திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
சனிக்கிழமையன்று ராயபுரத்தில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகி பிடித்த அதிமுக-வினர், அவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் வைத்து அடித்து சட்டையை கழற்றி கைகளை கட்டினர்.
பின் அவரை அப்படியே சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.குறித்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரை சென்னை எழும்பூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.