அதிமுகவை உடைக்க கைமாறிய ரூ.1000 கோடி? பின்னணியில் இவர் தானா?
அதிமுகவை உடைக்க கைமாறிய ரூ.1000 கோடி கைமாறியதாக அதிமுக நிர்வாகி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் பிளவு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
அதிமுக 172 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவது நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அதிமுக மற்றும் திமுக கூட்டணியமைத்து ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு அதிமுகவில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சித்த போது, அதை செய்யக்கூடாது என நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் என சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக குழு தெரிவித்துள்ளது.
மேலும், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதனையடுத்து, தவெகவிற்கு ஆதரவாக உள்ள குழுவினரின் மாவட்ட செயலாளர்கள் பதவியை பறித்த எடப்பாடி பழனிசாமி, தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென மனு அளித்துள்ளார்.
கைமாறிய ரூ.1000 கோடி?
இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் தான் இந்த பிளவிற்கு காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் முடிவுக்கு பின்னர் அவரே முதலில் தவெக விற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் எனவும், தவெக மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு பாலமாக செயல்பட்டார் எனவும் கூறப்படுகிறது.
IJKவில் இருந்து விலகிய லீமா ரோஸ், எஸ்.பி.வேலுமணி ஆதரவுடன் அதிமுகவில் இணைந்தாகவும், கட்சியில் சேர்ந்த சில நாட்களிலே தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்தது. தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்நிலையில் அதிமுகவை உடைக்க லொட்டரி சீட்டு பணம் ரூ.1000 கோடி அளவில் கைமாறியதாக அதிமுக நிர்வாகி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், ரூ.1000 கோடியை வாங்கி கட்சிக்கு அந்த பெண்மணியை தலைவியாக்க வேலுமணி திட்டம் போட்டார். இப்போது பணத்தை வாங்கி கொண்டு கத்துகிறார்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |