அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா - சபாநாயகர் ஏற்க மறுத்தது ஏன்?
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இசக்கி சுப்பையா ராஜினாமா
அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

ராஜினாமா கடிதத்தை ஏற்ற சபாநாயகரை 3 தொகுதிகளை காலி தொகுதிகளாக அறிவித்தார்.
தவெக குதிரை பெற அரசியலில் ஈடுபடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெகவிற்கு ஆதரவாக அந்த எம்எல்ஏக்கள் வாக்களித்தது தொடர்பாக கட்சி தடை தாவல் சட்டத்தின் படி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் ராஜினாமாவை ஏற்றது குறித்து சபாநாயகரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் புகார் அளித்தனர்.
கட்சி தடை தாவல் சட்டத்தின் படி எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதால், அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் என தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கினார்.

ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி அளிக்க வேண்டிய நிலையில், டைப் செய்து கொண்டு வந்ததால் ஏற்க மறுத்துள்ளார். அதன் பின்னர் கைப்பட கடிதம் எழுதி மீண்டும் சபாநாயகரிடம் வழங்கியுள்ளார்.
அதிமுக நிர்வாகிகள் சசிரேகா, பாப்புலர் முத்தையா மற்றும் அதிவீரராம பாண்டியன் உள்ளிட்டவர்களும் இசக்கி சுப்பையாவுக்கு ஆதரவாக சபாநாயகர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
நேற்று 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், இன்று இசக்கி சுப்பையா ராஜினாமா செய்ததுடன் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 43 ஆக குறைந்துள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, "என் தொகுதி மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் தமிழக முதல்வரை சந்திப்பேன்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |