அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்த பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்
அரசியல் பேச்சாளரும், சின்னத்திரை நடிகருமான அருள்மணி திடீரெனெ மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அருள்மணி மரணம்
'அழகி', 'தென்றல்' போன்ற தொலைக்காட்சி தொடர்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் அருள்மணி. இவர், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார்.
இவர், நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இயக்குநர் பயிற்சி பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல் உத்வேகம் அளிக்கக்கூடிய பேச்சுக்களை பேசியும் வந்தார்.
இவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பதால் அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அதோடு, அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கிறார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் அதிமுக சார்பில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த 10 நாட்களாக அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்து வந்த நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி அதிமுகவினரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |