Viral Video: ரயில்வே பிளாட்பாரத்தில் பல்டி அடிக்கும் சாகச வீடியோ!
பீகார் மாநிலம் மன்பூர் சந்திப்பில் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் இளைஞர் ஒருவர் பல்டி அடிக்கும் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இளைஞரின் வைரல் வீடியோ
சமூக ஊடகங்களில் லைக்கை பெறுவதற்கு பலரும் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், பல அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.
ஓடும் ரயிலின் முன் நின்றும், மலை மீது நின்றும், தண்ணீர் பகுதிகளில் நின்றும் செல்ஃபி எடுத்து வருகின்றனர். தங்களுடைய பாதுகாப்பை நினைக்காமல் லைக்கிற்காக சிலர் உயிரைத் தொலைத்து விடுகின்றனர்.
அந்தவகையில், பீகார் மாநிலம் மன்பூர் சந்திப்பில் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் இளைஞர் ஒருவர் பல்டி அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
A young man who gained fame for his reckless stunts at Manpur Junction, was arrested by #RPF for creating nuisance and unauthorized entry.
— RPF INDIA (@RPF_INDIA) July 10, 2023
We hope this will serve as a lesson for others who put their lives at risk for likes and shares in social media. #SafetyFirst pic.twitter.com/qDCj9H9mFK
அந்த இளைஞர் வீடியோவில், தனது கால்களை கார்ட்வீல்களை இயக்குவது போல் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதனை மற்ற பயணிகள் ஆச்சரியமுடன் பார்க்கிறார்கள். அனைவரையும் ஈர்க்கும் வகையில் இந்த சம்பவம் இருந்தாலும், ஒரு நொடியில் இளைஞருக்கு ஆபத்தாக கூட அமையலாம்.
இளைஞர் கைது
இந்த வீடியோ வைரலானதையடுத்து இரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) இளைஞரை கைது செய்தனர்.
மேலும், இரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளதோடு, தொந்தரவு செய்ததற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர்களுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என நம்புகிறோம். #SafetyFirst என்று இரயில்வே பாதுகாப்புப் படையினர் வீடியோவைப் பகிரும்போது குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |