Advertising என்றால் என்ன? உங்களால் மறக்க முடியாத விளம்பரம் எது?
Advertisement என்ற வார்த்தையை கேட்டதுமே பலருக்கும் சட்டென பல நினைவுகள் வந்து செல்லலாம், நாம் சிறுவயதில் பார்த்து ரசித்த பல விளம்பரங்களின் வீடியோக்கள் இன்றும் நம் மனஓட்டத்தில் அசைப்போட்டு கொண்டிருக்கும் என்பது உண்மை தானே!!!
7 வயதிலோ, 17 வயதிலோ எத்தனை ஆண்டுகளை கடந்தாலும் நமக்கு பிடித்த, நம்மை கவர்ந்த விளம்பரங்களையும், அதில் விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்களையும் நாம் மறந்திருப்போமா?
இப்போதும் கூட ஒரு சில விளம்பரங்களை தொலைக்காட்சியில் விரும்பி பார்த்திருக்கொண்டிருப்போம் தானே...
இந்த பதிவில் நாம் Advertising என்பது என்ன? Advertising-ன் முக்கியத்துவம் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
Advertising என்பது என்ன?
தங்களது தயாரிப்புகளை அல்லது சேவைகளை வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் அவர்களது கவனத்தை ஈர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் தொடர்பு சாதனத்தையே விளம்பரம்(Advertising) என கூறுகிறோம்.
சுருக்கமாக சொல்லப்போனால் நிறுவனத்துக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான தகவல் தொடர்பே Advertising.
Advertising மூலமாக மிக எளிதில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம், தங்களது பிற தயாரிப்புகளையும் மிக எளிதில் கொண்டு சேர்க்கலாம்.
19ம் நூற்றாண்டில் Advertising தொடங்கியதாக தெரிகிறது, முதன்முறையாக Soap தயாரிப்பு நிறுவனம் ஒன்று, விளம்பரம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பகால கட்டத்தில் வானொலி, மாத இதழ்கள், தொலைக்காட்சி மற்றும் மின்னஞ்சல் மூலமாக விளம்பரம் செய்தனர்.
தற்போது தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் இணையதள பக்கங்கள், சமூகவலைத்தளங்கள், இணையத்தேடல் பக்கங்களின் வாயிலாக விளம்பரம் செய்யப்படுகிறது.
Advertising வகைகள்
Persuasive - ஒரு தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றிய மக்களின் அணுகுமுறையை மாற்றுதல்
Informative - ஒரு தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றிய தகவல்களை வழங்குதல், மக்களை வாங்குவதற்கு வற்புறுத்த முயற்சிக்காமல் தகவல்கள் மட்டுமே வழங்குதல்
நிறுவனத்திடம் இருந்து எந்த மாதிரியான பொருட்களை வாங்கலாம் என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், மற்ற நிறுவனப் பொருட்களிடமிருந்து இது எந்த விதத்தில் வேறுபடுகிறது என்பதையும் கூற வேண்டும்.
Advertising முன்
நிறுவனம் ஒன்று தங்களது தயாரிப்பை Advertising செய்வதற்கு முன்பாக, விளம்பரத்திற்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு? எந்த மாதிரியான வாடிக்கையாளர்களை விளம்பரம் சென்றடைய வேண்டும்? விளம்பரம் செய்வதால் வரும் வருமானம் என்ன? என்பது குறித்து முதலில் திட்டமிட வேண்டும்.
இதிலும் முக்கியமாக தங்களது போட்டி நிறுவனங்கள் என்னென்ன யுக்திகளை கையாள்கிறார்கள் என்பது குறித்தும் சரியான முறையில் திட்டமிட வேண்டும், சந்தையில் கிடைக்கும் பொருட்கள் குறித்தும், எந்த சூழலில் மக்களுக்கு தேவைப்படுகிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்வதும் அவசியம்.
காலநிலைகளுக்கு ஏற்றவாறும் திட்டமிட வேண்டும், உதாரணத்திற்கு கோடை காலங்களில் AC விற்பனை அதிகரிக்கும், அந்நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ அதை விளம்பரப்படுத்துவதற்கும் நிறுவனத்தின் திட்டமிடல் அவசியம்.
கருத்தில் கொள்ள வேண்டியது
பாலினம்
வயது
கல்வி நிலை
வருமான நிலை
அஞ்சல் குறியீடு
மேல்குறிப்பிட்ட 5 விடயங்களை சரியாக திட்டமிடுவதன் மூலம் உங்களின் Target Customerகளை எளிதில் கண்டறியலாம்.
உள்ளூர் பகுதி வாடிக்கையாளர்களாக இருப்பின் வீடு வீடாக சென்றோ, செய்தித்தாள்களின் வாயிலாகவோ விளம்பரம் செய்யலாம், இது செலவை மிச்சப்படுத்துவதன் விற்பனையையும் அதிகரித்துவிடும்.
Advertising செய்வது எப்படி?
விளம்பரம் செய்ய முறையான திட்டமிடலுக்கு பின்னர், எதன் வழியாக சென்றடைய வேண்டும் என்பதை ஆலோசிக்கவும், தற்போதைய கால கட்டத்தில் வாடிக்கையாளர்கள் இணையதளத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
உலகின் எந்தவொரு மூலையில் இருந்து பொருட்களை வாங்கலாம்/ விற்கலாம் என்ற சூழலே உள்ளது, இணையதள பக்கங்கள், சமூகவலைத்தளங்கள் மூலமாக விளம்பரம் செய்யலாம்.
நேரடியாக வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு விளம்பரத்தை அனுப்பலாம், வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்ணுக்கு Whatsapp செய்யலாம், வாட்ஸ்அப்பில் குழு ஒன்றை உருவாக்கி விளம்பரமும் செய்யலாம்.
பண்டிகை காலங்களுக்கு ஏற்ற தள்ளுபடி உட்பட இதர பிற சலுகைகள் குறித்தும் விளம்பரத்தில் குறிப்பிடுவது வாடிக்கையாளர்களை எளிதில் கவரும், உங்கள் பொருட்களில் உள்ள சிறப்பான பண்புகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும்.
முக்கியமான சாலைகளில் Bannerகள் வைப்பது, பொது இடங்களில் Notice அளிப்பது, Warranty உட்பட இதர பலன்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும்.
பண்டிகை காலங்கள், காலநிலைகளுக்கு ஏற்ற தள்ளுபடி விலைகள் குறித்தும் விளம்பரம் செய்தால் வாடிக்கையாளர்களை எளிதில் கவரலாம்.
ஓன்லைன் செய்தி தளங்களில், உங்களது தயாரிப்பு பொருட்களின் சிறப்புகளை எடுத்துரைத்தும் விளம்பரம் செய்யலாம்.
10- 15 நொடிகள் அடங்கிய சிறிய வீடியோ தொகுப்பும் விளம்பரமே, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளம்பரம் பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
உள்ளூர் பகுதி மக்களுக்கு Public Relation Campaign நடத்தியும் விளம்பரம் செய்யலாம், இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள நபர்களிடம் பணம் செலுத்தியும் விளம்பரம் செய்யலாம்.
விளம்பரம் செய்வதற்கு
சாலையோர விளம்பர பலகைகள், கட்டிடங்களின் சுவர்கள், இணையதளங்கள், மின்னஞ்சல், செய்திமடல்கள், தயாரிப்பு பேக்கேஜிங், ஹொட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பொதுபோக்குவரத்து வாகனங்களில், சுரங்கப்பாதை, பாலத்தின் சுவர்கள், விளையாட்டு அரங்கங்கள் மற்றும் YouTube வீடியோக்கள்.
Advertising செய்யும் பொழுது
Target Customer களை கண்டறிந்து அதற்கான வழிமுறைகளையும் திட்டமிட்ட பின்னர், வருமானம் ஈட்டக்கூடிய வகையில் விளம்பரம் செய்வது மிகவும் முக்கியம்.
வாடிக்கையாளர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் Advertisingல் வார்த்தைகளோ/வாக்கியங்களோ இடம்பெற வேண்டும், வீடியோவாக இருந்தால் இசையும், வீடியோவின் தரமும் வண்ணமயமாக இருக்க வேண்டும்.
ஏன் இந்த பொருளை வாங்க வேண்டும்? பலன்கள் என்ன? Warranty உட்பட இதர பலன்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இறுதியில் எந்த வழிகளில் அந்த பொருளை வாங்க வேண்டும் என்ற தகவல்களும் இடம்பெறுவது அவசியம்.
நிறுவனத்தின் தொலைபேசி எண்ணோ அல்லது நிறுவனத்தின் இணையதளப்பக்கமாகவோ இருக்கலாம்.
Advertising செய்த பின்னர்
வாடிக்கையாளர் பொருட்களை வாங்கியதும் அவர்களது கருத்துகளை கேட்டறிவது அவசியமாகிறது.
ஏதேனும் குறைகள் இருந்தாலும், அதைப் பயன்படுத்துவதில் இருக்கும் சந்தேகங்களையும்/சிக்கல்களையும் சரிசெய்வதும் நிறுவனத்தின் மதிப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துவிடும், இது உங்கள் விற்பனையை பன்மடங்காக்கலாம்.
நிறுவனம் நற்பெயரை பெற்றுவிட்டாலே, அதன் மற்ற தயாரிப்பு பொருட்களும் எளிதில் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்றுவிடும் என்பது மறுப்பதற்கில்லை!!!