வாரம் ஒன்றிற்கு 500 பேர்வரை உயிரிழக்கலாம்: பிரித்தானிய சுகாதாரத்துறையினர் கூறும் ஆலோசனைகள்
குளிர்காலத்தில் உருவாகும் ப்ளூ முதலான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோரால், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேருவதால், 300 முதல் 500 பேர் வாரம் ஒன்றிற்கு உயிரிழக்க நேரிடலாம் என மருத்துவர்கள் எசரித்துள்ளார்கள்.
ஆகவே, கோவிட் மறும் ப்ளூ காய்ச்சல் முதலான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானிய சுகாதாரத்துறையினர் சில ஆலோசனைகளை அளித்துள்ளார்கள்.
பெரியவர்களுக்கு ஆலோசனைகள்
கோவிட் மற்றும் ப்ளூ காய்ச்சல் முதலான பிரச்சினைகள் அதிகரித்து மருத்துவ அமைப்புக்கு அழுத்தம் அதிகரிப்பதை தவிர்ப்பதற்காக, வயதுவந்தவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால் மாஸ்க் அணியுமாறும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளபோது வெளியே செல்வதைத் தவிர்த்து வீடுகளில் இருக்குமாறும் முதன்மை மருத்துவ ஆலோசகரான பேராசிரியர் Susan Hopkins ஆலோசனை அளித்துள்ளார்.
சிறுவர்களுக்கு ஆலோசனைகள்
சிறுபிள்ளைகளைப் பொருத்தவரை, பள்ளிகள் மற்றும் பிற கல்வி அமைப்புகளில் முடிந்தவரை தொற்று பரவலை குறைக்க முயல்வது அவசியம் என்று கூறும் பேராசிரியர் Susan Hopkins, பிள்ளைகளுக்கு காய்ச்சல் இருக்கும்பட்சத்தில், அவர்கள் நலம் பெறும் வரை அவர்களை பள்ளிக்கு அனுப்பவேண்டாம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், ப்ளூ தடுப்பூசி பெறத் தகுதியுடையோர், தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை அளித்துள்ளார் அவர்.