நாளை பிரான்ஸ் தலைநகரில் பிரம்மாண்ட அளவிலான போக்குவரத்து வேலை நிறுத்தம்: பயணம் செய்வதைத் தவிர்க்க மக்களுக்கு ஆலோசனை
நாளை வெள்ளிக்கிழமை, (18.2.2022) அன்று, போக்குவரத்து யூனியன்கள் வேலை நிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பாதிக்கு மேற்பட்ட ரயில்கள் இயங்காது என்றும், சில ரயில்கள் நெருக்கடி நேரத்தில் மட்டும் இயங்கும் என்றும் தெரியவந்துள்ளது.
ரயில்கள் மட்டுமின்றி, ட்ராம்கள், பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட உள்ளன.
போக்குவரத்துத்துறை அமைச்சரான Jean-Baptiste Djebbari, நாளை யாருக்கெல்லாம் வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்வது சாத்தியமோ, அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று கூறியுள்ளார்.
அத்தியாவசிய தேவை இருந்தாலொழிய பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த வேலை நிறுத்தத்தால், Transilien ரயில் சேவை மற்றும் RER ரயில் சேவையும் பாதிக்கப்படாது.
போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளதையடுத்து, யூனியன்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
எந்தெந்த சேவைகள் இயங்குகின்றன என்பது குறித்த தகவல்களுக்கு...
https://www.thelocal.fr/20220216/massive-transport-strike-what-services-are-running-in-paris-on-friday/