உடனே இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் உத்தரவு
உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் உக்ரைனை விட்டு வெளியேறும் படி அங்கிருக்கும் தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளன.
இந்தியாவும் உக்ரைனில் உள்ள தனது குடிமக்களை அங்கிருந்து வெளியேறும் படி அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று பிப்ரவரி 20ம் திகதி உக்ரைன் தலைநகர் Kyiv-ல் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களுக்கு மீண்டும் அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், உக்ரைனில் தொடர்ந்து நிலவும் அதிகபடியான பதட்டங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய தேவையின்றி உக்ரைனில் உள்ள இந்தியர்கள் மற்றும் அனைத்து இந்திய மாணவர்களும் தற்காலிகமாக உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சார்ட்டர் விமானங்கள் பற்றிய புதிய தகவலுக்கு, இந்திய மாணவர்கள் அந்தந்த மாணவர் ஒப்பந்ததாரர்களுடன் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலதிக புதிய தகவலுக்கு, தூதரக பேஸ்புக், இணையதளம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை தொடர்ந்து பின்தொடருமாறு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ADVISORY FOR INDIAN NATIONALS IN UKRAINE.@MEAIndia @DrSJaishankar @PIBHindi @DDNewslive @DDNewsHindi @IndianDiplomacy @PTI_News @IndiainUkraine pic.twitter.com/i3mZxNa0BZ
— India in Ukraine (@IndiainUkraine) February 20, 2022