பெற்ற மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்த பெற்றோரை சிறையில் சந்தித்து பேசிய பெண் யார்? அவர் கூறிய முக்கிய தகவல்
இந்தியாவில் இரண்டு மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த பெற்றோர் வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா.
எம்.எஸ்சி., பிஎச்டி பட்டம் பெற்ற புருசோத்தம், மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக இருக்கிறார்.
முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர்.
இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் முதல்வராக இருக்கிறார்.
இந்த தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவரான அலேக்கியா (27) முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைக்கல்லூரியில் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் தனது இரண்டு மகள்களையும் நிர்வாணமாக்கி புருசோத்தம் - பத்மஜா தம்பதி நரபலி கொடுத்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட தம்பதி தற்போது சிறையில் உள்ளனர்.
விரைவில் இருவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படவுள்ளனர்.
இதனிடையில் தனது மூத்த மகளுக்கு புருசோத்தம் கார் ஒன்றை பரிசாக வாங்கி தர திட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
கார் குறித்து அவர் தனியார் நிறுவனத்திடம் விசாரித்திருக்கிறார்.
இதனிடையில் இந்த வழக்கில் புருசோத்தம் - பத்மஜாக்கு ஆதரவாக வழக்கறிஞர் கிருஷ்ணமாச்சாரி ஆஜராகவுள்ளார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா துஷ்பிரயோகம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் சார்ப்பில் நீதிமன்றத்தில் ஆஜரானவர் ஆவார்.
தற்சமயம் சிறையில் உள்ள புருசோத்தமை கிருஷ்ணமாச்சாரி சார்பில் அவர் உதவியாளரான ரஜினி என்ற பெண் சந்தித்து பேசியுள்ளார்.
விரைவில் அவர் பத்மஜாவையும் சந்திக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் கூறுகையில், புருசோத்தம் - பத்மஜா தம்பதியிடம் பயின்ற பழைய மாணவர்கள் எங்களிடம் இந்த வழக்கில் வாதாட கோரிக்கை வைத்தனர்,