ஜேர்மனியில் இன்று தேர்தல் நடந்தால்... புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பு
புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சிக்கு ஜேர்மன் மக்களிடையே ஆதரவு பெருகியுள்ளது.
ஆக, இன்று ஜேர்மனியில் தேர்தல் நடைபெறுமானால், அக்கட்சி பிரதான கட்சியாக உருவெடுக்கும் என்கின்றன நேற்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள்.
புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பு
ஜேர்மனியில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Bild பத்திரிகையின் சார்பில் Insa institute என்னும் நிறுவனம் நேற்று மேற்கொண்ட ஆய்வில், AfD கட்சிக்கான ஆதரவு ஒரு சதவிகிதம் அதிகரித்து 26 சதவிகிதமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
ஆளும் CDU/CSU கூட்டணிக்கு மக்கள் அளித்துவரும் ஆதரவில் மாற்றமில்லை, அது 25 சதவிகிதமாகவே நீடிக்கிறது.
ஆக, இன்று ஜேர்மனியில் தேர்தல் நடைபெறுமானால், AfD கட்சி பிரதான கட்சியாக உருவெடுக்கும் என்கின்றன கருத்துக்கணிப்புகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |