ஜேர்மனி பொதுத்தேர்தல்: வேட்பாளரை இப்போதே தேர்ந்தெடுத்தது புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி
ஜேர்மனியில் பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சி மட்டுமின்றி, எதிர்க்கட்சியும் சேன்ஸலர் வேட்பாளரை இப்போதே தேர்ந்தெடுத்துவிட்டது.
அடுத்த தலைவர் யார்?
ஆளுங்கட்சியைப் பொருத்தவரை, ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலர் போட்டியில், CDU கட்சியின் தலைவரான Friedrich Merz, CSU தலைவரான Markus Söder, North Rhine-Westphalia மாகாணத்தில் கூட்டணி அரசின் தலைவரான Hendrik Wüst ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.
இதற்கிடையில், எதிர்க்கட்சியான Alternative for Germany (AfD)யும், சேன்ஸலர் வேட்பாளரை இப்போதே தேர்ந்தெடுத்துவிட்டது.
எதிர்க்கட்சி வேட்பாளர்
ஜேர்மன் எதிர்க்கட்சியான Alternative for Germany (AfD), சேன்ஸலர் வேட்பாளராக ஆலிஸ் (Alice Weidel) என்னும் பெண்ணை முன்னிறுத்தியுள்ளது.
பொருளாதாரவியல் நிபுணரான ஆலிஸ், 2019ஆம் ஆண்டு முதல், கட்சியின் இணைத் தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார்.
ஆலிஸ் அந்த பொறுப்பில் நீடிப்பதற்கு ஆதரவாக, இந்த ஆண்டின் துவக்கத்தில் கட்சியின் உறுப்பினர்களில் 79.8 சதவிகிதத்தினர் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |