ஜேர்மன் மாகாணத் தேர்தல்கள்... ஆளுங்கட்சிக்கு ஒரு பாடம்
ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மன் மாகாணமொன்றில் நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சி தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
என்றாலும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மக்களிடையே தொடர்ந்து ஆதரவு பெருகி வருவதையும் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
ஜேர்மன் மாகாணத் தேர்தல்கள்...
ஞாயிற்றுக்கிழமையன்று ஜேர்மனியின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான North Rhine-Westphaliaவில் தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் சார்ந்த Christian Democratic Union (CDU) 33.3 சதவிகித வாக்குகளைப் பெர்று முதலிடத்தில் உள்ளது.
விடயம் அதுவல்ல, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதுதான் இந்த தேர்தலில் கவனிக்கத்தக்க விடயம்.
அதாவது, இந்த தேர்தலில் என்ன நடந்தாலும், அது ஆளும் அரசில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
என்றாலும், இந்த தேர்தல், மே 6ஆம் திகதி நடந்து முடிந்த ஃபெடரல் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி குறித்து மக்கள் கருத்து என்ன என்பதை அரசியல்வாதிகள் அறிந்துகொள்ளும் ஒரு கருத்துக்கணிப்பாக பார்க்கப்படுகிறது.
அவ்வகையில், ஆளுங்கட்சி தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது உண்மைதான் என்றாலும், வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு மக்களிடையே ஆதரவு கணிசமாக பெருகிவருகிறது என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
AfD கட்சியைப் பொருத்தவரை, கொரோனா காலகட்டத்துக்கு முன் அப்படி ஒரு கட்சியைக் குறித்து அதிகம் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது AfD கட்சிக்கு மக்களிடையே பெரிய அளவில் ஆதரவொன்றும் இல்லை.
ஆனால், இன்று அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ள அக்கட்சி, நடந்து முடிந்த மாகாணத் தேர்தலில் 14.5 சதவிகித வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஆக, அக்கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகிவரும் நிலையில், ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகள் மக்கள் மனதில் இடம்பிடித்தாக வேண்டிய நிலையில் உள்ளதை மறுப்பதற்கில்லை.
அதை ஆளுங்கட்சியினரும் நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதும் தெரிகிறது. காரணம், North Rhine-Westphalia மாகாணத்தில் Minister-President பொறுப்பு வகிக்கும் Hendrik Wüst, இந்த தேர்தல் முடிவுகள், நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும்கூட, ஓய்வெடுக்க முடியாது, தொடர்ந்து கடினமாக உழைத்தாகவேண்டும் என்பதையே காட்டுகின்றன என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |