மலிவு விலையில் மீண்டும் நோக்கியா: வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கவருமா Nokia 125 4G
நோக்கியா தன்னுடைய மலிவு விலை போனான Nokia 125 4G-ஐ சீனாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எளிமை மற்றும் மலிவு விலையை குறிவைத்துள்ள நோக்கியா Nokia 108 போனின் வெளியிட்டு தொடர்ச்சியாக Nokia 125 4G-ஐ சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த போன் விரைவில் EMEA சந்தைக்கு வரக்கூடும் என்று வதந்திகள் தகவல் தெரிவிக்கின்றன.
வடிவமைப்பு, அடிப்படை அம்சங்கள்
Nokia 125 4G 2.4-இன்ச் திரையுடன் கச்சிதமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
அத்தியாவசிய தருணங்களை பதிவு செய்ய, இதன் பின்புறத்தில் QVGA கேமரா (0.1 மெகாபிக்சல்) கொடுக்கப்பட்டுள்ளது.
நவீன இணைப்புத்தன்மைக்கு Bluetooth 5.0 மற்றும் சார்ஜிங் செய்வதற்கான மெல்லிய USB-C போர்ட் ஆகியவை கொடுக்கபபட்டுள்ளது.
மேலும், 4G ஆதரவு மற்றும் VoLTE தொழில்நுட்பத்துடன் தெளிவான குரல் அழைப்புகளை அனுமதிக்கிறது.
பற்றரி
நோக்கியா அதன் நீடித்த தொலைபேசிகளுக்கு பெயர் பெற்றது அந்த வகையில் 125 4G நீண்ட காலம் நீடிக்கும் வகையில் 1,450 mAh பற்றரி திறனை கொண்டுள்ளது.
அத்துடன் ஹெட்போன்-ஜாக்-ஃப்ரீ FM ரேடியோ, MP3 பிளேயர் மற்றும் பயனுள்ள ஃபிளாஷ் லைட் போன்ற அத்தியாவசியங்கள் தொகுப்பை நிறைவு செய்கின்றன.
விலை
Nokia 125 4G சீனாவில் வெறும் 329 யுவான் (சுமார் €43) க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த போன் தற்போது JD.com இல் சாம்பல் மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது.
Nokia 125 4G பெரிய, பயன்படுத்த எளிதான பொத்தான்களை கொண்டுள்ளது மற்றும் Alipay, Himalaya மற்றும் Migu Music போன்ற பிரபலமான பயன்பாடுகளுடன் முன்கூட்டியாக வழங்கப்படுகிறது.
இந்த போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |