ஆப்கானிஸ்தானை தவிடுபொடியாக்கி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாட்டம்
ஆப்கானிஸ்தான் அணி ஹம்பன்டோடவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் ஆடியது. இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் துஷ்மந்தா சமீரா மற்றும் லஹிரு குமாரவின் மிரட்டலான தாக்குதலில் தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
சிறிது நேரம் தாக்குப்பிடித்த முகமது நபி 23 ஓட்டங்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆல்ரவுண்டர் வீரர் குல்பதின் நைப் பவுண்டரிகளை விரட்டி இலங்கையின் தாக்குதலை சமாளித்தார். ஆனால் அவரால் நீண்ட நேரம் நின்று ஆடமுடியவில்லை.
1️⃣8️⃣ Overs ✅
— Afghanistan Cricket Board (@ACBofficials) June 7, 2023
AfghanAtalan are struggling to get going and have been reduced to 92/8 after 18 overs. ?#AfghanAtalan | #SLvAFG2023 | #SuperCola pic.twitter.com/yGT5j3ZX63
தீக்ஷனாவின் பந்துவீச்சில் அவர் 20 ஓட்டங்களில் தனஞ்செய டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஹசரங்காவின் மாயாஜாலம்
ஒருபுறம் வேகப்பந்துவீச்சுக்கு விக்கெட்டுகளை இழந்த ஆப்கான், மறுபுறம் ஹசரங்காவின் சுழற்பந்து வீச்சுக்கு இரையானது. கடைசி மூன்று விக்கெட்டுகளாக ரஷித் கான் (2), முஜீப் உர் ரஹ்மான் (0) மற்றும் பாரூக்கி (4) ஆகியோர் ஹசரங்காவின் சுழலில் வீழ்ந்தனர்.
??? Dushmantha Chameera's fiery pace claims four wickets for Sri Lanka! #SLvAFG pic.twitter.com/AnkP2f3keV
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 7, 2023
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு சுருண்டது. சமீரா 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா 3 விக்கெட்டுகளும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளும், தீக்ஷனா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
? Sri Lanka's bowling shines bright! ? Afghanistan all out for 116. ? #SLvAFG pic.twitter.com/xMi1sH5vow
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 7, 2023
தொடக்க வீரர்கள் அரைசதம்
எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அரைசதம் விளாசிய பதும் நிசங்கா, 34 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் மறுமுறையில் 56 ஓட்டங்கள் எடுத்து, 16 ஓவர்களிலேயே திமுத் கருணரத்னே ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளையும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா வென்றார்.
? Sri Lanka dominates the 3rd ODI! ? With a crushing victory, ?? clinch the series 2-1 against Afghanistan.?#SLvAFG pic.twitter.com/bKwPi2z7PE
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 7, 2023